Hospital Overview

நினைவு நிலையில் வைத்து மூளை கட்டி அறுவை சிகிச்சை

Date : 1st Jun 2016

ஐ.டி. துறையில் பணியாற்றும் ஒருவர்d திடீரென பேச்சுத்திறன் தடைப்பட்டதால், சேலம், நியூரோ பவுண்டே­ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில், இடது பக்க மூளையில், பேசுவதற்கு காரணமான பகுதியில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளை நரம்பியல் துறை தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன், உதவி மருத்தவர் சுரேஷ்குமார், மயக்கவியல் நிபுணர் சேகர் ஆகியோர், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின், அவர், இயல்பாக பேசுகிறார்.இது குறித்து, மருத்துவமனை மூளை நரம்பியல் துறை தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் கூறியதாவது:-
மூளைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்வது கடினமானது. அறுவை சிகிச்சை செய்யும்போது, இயல்பான
மூளை பகுதிகள் சேதமடையும். அந்த கட்டியை அகற்றாவிட்டாலா உயிருக்கே ஆபத்தாகி விடும். எனவே,
பாதிக்கப்பட்டவரை விழிப்பு நிலையில், சுய நினைவோடு வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும். அப்போது,
அவரிடம் கேள்விகள் கேட்பதோடு, படிக்க வைத்தல், படங்களை காட்டி விளக்கமும் கேட்கப்படும். தவறுகள்
காணப்பட்டால், அப்பகுதி மூளையை பாதுகாத்து சிகிச்சை அளிக்கப்படும்.இதன் மூலம், மூளையின் செயல்பாடுகளை உணர முடிவதால், மூளை அறுவை சிகிச்சையால் ஏற்படக்கூடிய பேச்சு இVப்பு, கை, கால்கள் பக்கவாதம் முதலான பாதிப்புகளை தவிர்த்து விடலாம். வலியை உணர வைக்கும் மூளைக்கு, வலி உணர்வு கிடையாது என்பதால், இத்தகைய அறுவை சிகிச்சை சாத்தியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.